தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரவேசமும், அதனைத் தடுப்பதற்கான சதிமுயற்சிகளும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தப்படவுள்ள உள்ளுராட்சித் தேர்தலி;ல் முதன் முறையாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கம் போட்டியிடவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து கிழக்கு மாகாணத் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதார, அபிவிருத்தி சம்பந்தப்பட்ட உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க இவர்கள் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடவிருக்கின்றனர். இவர்களின் அரசியல் பிரவேசம் கிழக்கு மாகாண தமிழ் மக்களை பெரும் மகிழ்ச்சியிலும், திருப்தியான மனநிலையிலும் தள்ளியிருப்பதாக அப்பகுதியிலிருந்து கிடைக்கப்பெறும் தகவல்;கள் மூலமாக அறியக் கூடியதாகவுள்ளது.

பயங்கரவாதியுடனும், பிரதேசவாதியுடனும் கூட்டுச்சேர்ந்த சங்கரிக்கு கருணா மட்டும் கசப்பதென்ன?

திரு.ஆனந்தசங்கரி அவர்களுக்கு. தாங்கள் மட்டகளப்பு உள்ளுராட்சி மன்ற தேர்தலையொட்டி 'மட்டகளப்பு மக்களுக்கு" என விழித்து வெளியிட்டிருந்த
பகிரங்க வேண்டுகோளை செவிமடுத்ததன் பலனாகவே இப்பதிலுரையை தங்களுக்கு எளுதவினைகிறேன். ஒருதேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது அவரவருக்குரிய ஜனநாயக உரிமையாகும். ஆனால் உங்களைப் போன்ற முதிர்ந்த அரசியல்வாதி ஒருவர் குறைந்த பட்சம் நீங்கள் ஆதரிக்கின்ற கட்சிகளை அவர்களது கொள்கைகளை,அவற்றினை நிறைவேற்ற அவர்கள் கைக்கொள்ளும் வழிமுறைகளை பற்றி விளக்கி கூறியிருக்கவேண்டும்.அப்படி கூறி இருந்தால் அது மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்ய பயனுடையதாயிருந்ந்திருக்கும்.ஆனால் துரதிஷ்டவசமாக தங்களுடைய வேண்டுகோள் அவ்வாறு அமைந்திருக்கவில்லை. மாறாக தங்களது பிரசுரத்தில் சுருக்கமாக இரு விடயங்கள் மட்டுமே அடங்கிருந்தத.

மனித உரிமை பற்றி கூச்சலிட்ட மகான்கள் இன்று வாயடைத்து நிற்கின்றார்கள்

தேர்தல்கள் அறிவிக்கப்பட்டவுடன் பலதரப்பிலிருந்தும் மழைக்கு முளைத்த காளான்கள் போன்று பல மனித உரிமைவாதிகள் தோற்றம் பெற்றனர். மட்டகளப்பில் ஆயுதக்குழு ஆள்பிடிக்கிறது, கப்பம் பறிக்கிறார்கள், கடத்தல் நடக்கிறது,கருணாதரப்பு மற்றையகட்சிகளை வெருட்டுகிறது என்று மனித உரிமைவாதி பட்டங்களுடன் பலர் கொடிபிடித்தனர்.புலிகளின் மட்டகளப்பு பிரதேசபிரச்சாரப்பொறுப்பை இவர்கள் தற்காலிகமாக தங்களுக்குள் பங்கிட்டு கொண்டனர். தேர்தல்நடத்த கூடாது என்று புலிக்கூட்டமைப்பு ஒருபுறமும் இந்த புதிய புதிய மனித உரிமைவாதிகள் மறுபுறமுமாக பகிரதப்பிரயேத்தனம் பண்ணினர்.

கிழக்கின் குரலுக்கு

ஆளும்தரப்புடன் இணைவதால் மட்டுமே அபிவிருத்திகள் சாத்தியமாகும்

தலைமையைத் தங்கவைப்பதற்காக மீண்டும் பலிகொள்ள ஒண்றிணைக்கப்படும் ஒட்டுண்ணிகள்

காலத்திற்கேற்ப இந்தச் சமூகத்தை ஏமாற்றும் வித்தையை மிகசரியான தருணத்தில்; நடமுறைபடுத்துவதிலும் குட்டயைக்குழப்பி அதனூடாகத் தாங்கள் சுயலாபம் அடைவதிலும் அதனுடாக தங்கள் தலமையைத் தக்க வைத்து கொள்வதற்காக யாரை வேண்டுமானாலும் பலிகொடுக்கத் தயாராக இருகின்றார்கள் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கின்றார்கள் என்பதை இங்கு சுட்டிகாட்ட விரும்புகின்றோம். இதன் வெளிப்பாடகவே இன்று தங்கள் தலைமையையும் தங்கள் அமைப்புகளையும் பலபடுத்தும் நோக்குடன் இன்னும் பலரை பலிகொடுக்க தயாராகி வருகின்றார்கள்.

ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியினுடனான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தேர்தல் கூட்டு சரியான தருணத்தில் சரியான முடிவு.

ஆளும் ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட ரி.எம்.வி.பி. எடுத்திருக்கும் முடிவானது பல்வேறு கிழக்கிலங்கை புத்திஜீவிகளினாலும் சமூக நிறுவனங்களினாலும் வரவேற்கப்பட்டுள்ளது. அதேவேளை ஆளும் கட்சி ஒன்றுடன் கூட்டுச்சேரலாமா? எனும் அதிருப்தியினை மக்களிடம் ஏற்படுத்துவதில் ஒருசில ஊடகங்கள் முனைப்புக்காட்டிவருவதையும் அவதானிக்க முடிகிறது.

வாசகர்களின் கவனத்திற்கு!

எமது 'கிழக்கின் குரல்' இணையதளம் இன்றுமுதல் மீண்டும் செயற்பட ஆரம்பித்திருக்கின்றது என்பதனை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிய தருகின்றோம். எமது தளமானது அரசியல் சார் செய்தி விமர்சனங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதோடு இலக்கியம் சார்ந்தும் தனது பக்கங்களை சிறப்பிக்கும். விரைவில் இணையதள வானொலி ஊடாக இலங்கை அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெறும் விடயங்கள் சார்ந்த 'அரசியல்' நிகழ்ச்சியொன்றையும் நடத்தவுள்ளோம். இந்நிகழ்வில் ஐரோப்பிய நேயர்களுக்கு பரீட்சயமான அரசியல் ஆய்வாளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். எமது கிழக்கின் குரலுக்காக கட்டுரைகள், விமர்சனங்கள், மற்றும் பிரசுரிப்பதற்கேதுவான இன்னபிற அரசியல், இலக்கிய விடயதானங்களை உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கின்றோம்..

நன்றி
ஆசிரியர்
கிழக்கின் குரல்
08-02-08

கிழக்கின் முதற்கட்சி தனது கன்னித் தேர்தலைச் சந்திக்கின்றது.

என்றுமில்லாதவாறு மட்டக்களப்பு மக்கள் இம்முறை நடக்கவிருக்கின்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர். காரணம் சுதந்திர இலங்கையின் தேர்தல் வரலாற்றின் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்திலிருந்து முதலாவது அரசியல் கட்சி தோற்றம் பெற்றுள்ளது. அந்தவகையில் கிழக்கிலங்கை அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கிய காலகட்டம் இதுவாகும் என கருதப்படுகின்றது.

களைகட்டும் மட்டக்களப்பு உள்ளுராட்சி மன்றத் தேர்தல்.

இலங்கையின் எந்தவொரு மாவட்டத்திலும் இப்படியொரு பரபரப்பை உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் ஏற்படுத்தியதில்லை. மாறாக இம்முறை நடக்கவிருக்கின்ற மட்டக்களப்பு உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இலங்கை அரசியல் கட்சிகளிடையே மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் கூடிய கவனத்தை ஈர்த்திருக்கின்றது. ஆரம்பத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என ஒருசாராரும், நடத்தப்பட கூடாது என இன்னுமொருசாராரும் முனைப்புக்காட்டி வந்தனர். தேர்தல் நடத்தப்படுமா? இல்லையா? என்கின்ற நிலைமையையிட்டு முடிவெடுக்கப்பட முன்னரே தேர்தல் நடக்கின்ற பட்சத்தில் அதனைக் கண்காணிக்கத் தயாராயிருப்பதாக "போப்ரல்" அமைப்பும் தன் பங்கிற்கு அறிக்கை விட்டிருந்தது.

Syndicate content