காலத்திற்கேற்ப இந்தச் சமூகத்தை ஏமாற்றும் வித்தையை மிகசரியான தருணத்தில்; நடமுறைபடுத்துவதிலும் குட்டயைக்குழப்பி அதனூடாகத் தாங்கள் சுயலாபம் அடைவதிலும் அதனுடாக தங்கள் தலமையைத் தக்க வைத்து கொள்வதற்காக யாரை வேண்டுமானாலும் பலிகொடுக்கத் தயாராக இருகின்றார்கள் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கின்றார்கள் என்பதை இங்கு சுட்டிகாட்ட விரும்புகின்றோம். இதன் வெளிப்பாடகவே இன்று தங்கள் தலைமையையும் தங்கள் அமைப்புகளையும் பலபடுத்தும் நோக்குடன் இன்னும் பலரை பலிகொடுக்க தயாராகி வருகின்றார்கள். 1987 கால பகுதியில் ரெலோ அமைப்பு மீது கொலைவெறிபிடித்த பாசிசப்புலிகள் ஆக்கிரமிப்பு மேற்கொண்ட போதும் அதன் உறுப்பினர்ளை சுட்டும் உயிருடனும் எரித்து கொலை செய்தபோதும் அதனை தடுத்து நிறத்த தவறிய வக்கற்ற அன்றய தலைவர்களும் தளபதிகளும் இன்னும் இந்த அப்பாவிமக்களை பலிகொடுத்து தங்களது தலமையை தக்கவைப்பதே இவர்களுடைய நோக்கமாக கொண்டு இயங்குகின்றார்கள்.
இதன்வெளிப்பாடகவே தாம் ஒரு பெரிய கூட்டணி என்று கூறுவதற்காக பலரை தனது திரைக்கு பின்னால் நிறுத்தி அதில் தான் குளிர்காய, ஏனயவர்களை பலிக்கடாவாக்க நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். புலிகளி;ன் தலமைக்கும் அதன் தளபதிகளுக்கும் அன்றில் இருந்து இன்றுவரை மிகுந்த சவாலாக இருந்தவர்கள் இருப்பவர்கள் யார் என்பது யாவரும் அறிந்ததே. இவைகள் அனைத்தையும் மறைப்பதற்;கு என்னென்ன சதிவேலைகளை எல்லாம் பண்ணமுடியுமோ அவைகள்; அனைத்தையும் அன்றும் சரி இன்றும் தங்களுக்கு ஏற்றவாறு தங்களது கையாட்கள் மூலம் செய்து கொண்டு இருக்கிறார்கள். தலமுறை தலைமுறையாக தாங்களும் தங்களை சாந்தவர்களும் தான் ஆண்டபரம்பரை என்றும் ஆளப் பிறந்தவர்கள் தாங்கள் தான் என்ற கொள்கையை பின்பற்றி, எப்படி இந்த வடக்குத் தலமைத்துவங்கள் மக்களை ஏமாற்றி அரசியல நடாத்தி வந்தார்களோ அதேபாணியில் சற்று வித்தியாசமாக படுகொலை கலாசாரத்துடன் பிரபாகரனும் அதற்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்ற தோறணையுடன் தங்களது இருப்புக்கும் தலமைக்கும் சவாலாக இருப்பவர்களை கொலை செய்வதும் இல்லையேல் அவர்களுக்கு எதிரான சேறடிப்புகளை மேற்கொண்டு வருவதும் இவர்களது வழக்கமான கைங்கரியமாகும். தாங்கள் மாத்திரம் மட்டும்தான் ஐனனாயகவாதிகள், மனித உரிமையை கட்டி காப்பவர்கள் என்றும் புளுகி தள்ளுகிறார்கள். இந்த படுகொலை கலைசாரத்தை உருவாக்கியவர்களும் மனித உரிமையை எப்படி எல்லாம் மீறமுடியுமோ அத்தனை வழிகளிலெல்லாம் மீறியவர்களே, அவை அத்தனையையும் மூடிமறைப்பதுவேடிக்கையானதும் நகைப்புக்குரியதுமாகும்.
இன்றைய சூழலில் கிழக்கில் நடக்கும் உள்ளுராட்சி மன்றதேர்தல் சூடு பிடித்திருக்கும் இந்தநிலையில் ஜனனாயகமான முறையிலும் நீதியானதுமமான முறையிலும் அத்தேர்தல் நடக்கவேன்டும் என்பதே எமது கருத்தாகும. இந்த தேர்தலை கிழக்கில்வாளும் மக்கள் தமது பிரதேசத்தின் முதற்கட்ட வழற்சியின் ஏணிப் படியாகக் கருதியே செயற்படுகிறார்கள். ஒட்டுமொத்த கிழக்கு மக்களும் முஸ்லீங்கள் சிங்களவர் என்ற பேதம் ஏதுமின்றி தங்களது தலைமையை தாங்களே தீர்மானிக்க வேன்டும் என்பதே எமது வேன்டுகோளாகும்.
அவர்கள் சிங்கள மக்களின் கட்சியோடு ஐக்கியம் ஏற்படுத்திக் கொண்டதே வரலாற்றுத் தீர்க்க தரிசனமாகும். புலிப்பாசிசம் விழுந்தால் வடக்கு மக்களும் அதே வழியிற்போகவே முனைவார்கள். ஆனால் அது நிதர்சனமாகாது. ஏனெனில் கிழக்குப் போல் வடக்கில் மக்கள் ஒருமுகப் பட்ட கட்சி இல்லையாகும். புலி விழுந்ததுதான் தாமதம் வடக்கில் எண்ணற்ற வர்ணங்களில் ஜனனாயகக் கட்சிகள் தோன்றும். எப்படி எண்பதுகளில் பன்றி பதினாறு குட்டி போட்டது போலக் கொலைகார, வங்கிக் கொள்ளைக்கார இயக்கங்கள் தோன்றினவோ அதிலும் கூடுதலான ஜனனாயகக் கட்சிகளை வடக்கு உருவாக்கி மேலும் குழப்பத்திற்கு மேல் குழப்பி வடக்குவாழ் வறிய இன்னலுற்ற மக்களை மேலும் வதைப்பார்கள். கல்விச் செருக்கால் மார்தட்டும் படித்த கனவான்கள் பொது நன்மையை முதன்மைப் படுத்தித் தங்கள் தனித்துவங்களை நசுக்கியது கிடையாது. ஒரு போதும் நசுக்கவும் மாட்டார்கள். அதிலும் மேலாக இன்று புதிதாக ஆங்கிலத்தில் மனித உரிமைகள் பற்றி அறிக்கைகள் விட்ட ஏகாதிபத்திய ஏஜண்டுக் கூட்டமொன்று இன்று அரசியல்வானுக்கு வரத்தொடங்கி இருக்கிறது. என்ன மாதிரி புலம்பெயர் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கிலம் பேசிய கூட்டம் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், யூகோஸ்லாவியாவிலும் வந்திறங்கி அந்த நாடுகளின் மக்களின் நலன்களுக்கு மாறாக ஏகாதிபத்தியத்தியத்திற்கான வேலை செய்கிறார்களோ அதோபோலவே வடக்கில் நடைபெற இருக்கிறது.
வடக்கு மக்களுக்கோ மற்றும் எந்த மக்களுக்குமோ கிழக்கிலிருந்து எந்த ஆபத்தும் வரப் போவதில்லை. இந்த ஆங்கிலத்தில் அறிக்கைவிடும் கூட்டத்தால் மாத்திரம்தான் அந்த அழிவுகள் கட்டக்கடங்காமல் வரும். இதற்கோர் தக்க உதாரணத்தை நாம் காட்ட விரும்புகின்றோம். அண்மையில் வடக்குத் தலைமையில் ஒருவரான திரு ஆனந்த சங்கரி அவர்கள் லண்டனில் இருந்து இயங்கும் ஓர் அவமான வானொலில் இரணடு பேட்டிகளை ஒருமித்த இடைவெளியில் வழங்கியிருந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு வடக்குககு; வழங்க இருக்கும் இடைக்கால நிர்வாகத்திற்குக் கவர்ணராக ஆனந்த சங்கரியைப் போடப் போவதாக செய்திகள் அடிபட்ட அத்தருணம் லண்டனுக்கு வந்த ஆனந்த சங்கரியை அவ் வானொலி பேட்டி கண்டது. அதிலே அவர் கவர்ணராக வரப் போகிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு அவர் அதுபற்றி தனக்கு ஒன்றும் தெரியாது. தன்னுடன் ஜனாதிபதியோ வேறொருவருமோ அப்படிக் கேட்டது கிடையாது. தனக்கு லண்டனுக்கு வந்த பின்புதான் அப்படி ஒரு செய்தி தெரியும் என்று கூறியிருந்தார்.
அப்படிச் சொன்ன திரு ஆனந்த சங்கரி அவர்கள் போன கிழமை 6.2.08 இல் மேலும் ஒரு பேட்டியைக் கொடுத்தார். அதிலே தன்னை ஆறுமாதங்களுக்கு முன்னரே ஜனாதிபதி கவர்ணர் பதவியை ஏற்கும் படி கேட்டதாகக் கூறினார். செவ்வி கண்ட அந்த றேடியோவின் பணிப்பாளரும் இழிச்சவாயராக அதைக் கேட்டுக் கொண்டார். லண்டனில் வாழ்ந்து ஆங்கிலம் படித்த கூட்டமும் அதைக் கேட்டுப் பேசாமல் இருந்தது.
அந்த பேட்டியிலே இன்னுமொரு முக்கிய விடயம் இருந்தது. அந்த இடைக்கால நிர்வாகம் ஏற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் தான் அதை ஏற்க மாட்டேன். அதை ஆரும் ஏற்றால் அவர்களுக்கு ஒத்தாசை வழங்குவேன். தான் ஏற்றால் தன்னைத் துரோகி என்று சொல்லுவார்கள். தன்னைத்துரோகி என்று வடக்குவாழ் புலிக் கூட்டம் சொல்லும் என்பதற்காக சரியான ஒன்றைத் தான் ஏற்க மாட்டேன் என்று நா கூசாமல் கூறினார். இதைக்கேட்டும்; வடக்குவாழ் உற்சாகமாக அரசியல் செய்யும் அத்தனை பேரும் மெளனத்தால் அனுமதித்தார்கள். இலங்கை அரசியல் வரலாற்றில் மக்கள் நலன்பேணும் அத்தனை அரசியற் பிரேரணைகளையும் தீர்மானங்களையும் வடக்கிலே அரசியலில் உச்சியிலே இருந்த தலைமைகள் இப்படித்தான் பாழாக்கினார்கள். இன்றும் பாழக்குகிறார்கள். வடக்கில் படித்த பெரும்பான்மையான ஆங்கிலம் பேசும் ஏகாதிபத்திய அடிவருடிக் கூட்டமும் அதை ஆதரித்தே வந்துள்ளது. இந்த அனுபவ ஒளியிற்தான் கிழக்குமக்கள் தங்களது அரசியலைப் பரிபூரணமாக வேறுதிசையில் கொண்டு செல்ல முற்பட்டார்கள். அதற்குக் குறுக்கே நில்லாமல் அவர்களை அவர்களது பெரும்பான்மை எண்ணப்படி போகவிடுங்கள்.