கிழக்கின் குரலுக்கு

ஆளும்தரப்புடன் இணைவதால் மட்டுமே அபிவிருத்திகள் சாத்தியமாகும்

மட்டகளப்பு மாநகரசபைக்கன தேர்தலின் தமிழ்மக்கள் விடுதலைபுலிகனள் ஆளும்தரப்பினுடைய வெற்றிலைசின்னத்தில் போட்டியிடுவதன்மூலம் மட்டக்களப்பு நகரை அபிவிருத்திசெய்வதற்கான சரியான பாதையில்அடியெடுத்து வைத்துள்ளனர். காரணம் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஆளும்தரப்புடன் கைகோர்த்துகொண்டு செயற்பட்ட சந்தர்ப்பங்களில்மட்டுமே எமது அரசியல்வாதிகள் மக்களுக்காக எதையாவது செய்யமுடிந்தது என்பதே வரலாறு தருகின்ற பாடமாகும்.1970ம் ஆண்டு பராளுமன்றதேர்தலில் சுயேற்சையாக போட்டியிட்டபோதும் திரு.இராஜன்செல்வநாயகம் அவர்கள் தனது வெற்றியின்பின்னர் பாராளுமன்ற அமர்வுகளின் சிறிமாவோபண்டாரநாயககாவின் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டார் இதன்காரணமாக பிரதமமந்திரிக்கு நெருக்கமான அரசியல்வாதியாக அவரால் வலம்வரமுடிந்தது. ஒருசாதாரண எம்.பி.யாக இருந்தபோதும் ஒரு தகுதிவாய்ந்த அமைச்சருக்குரிய சகல அதிகரங்களையும் அவரால் பற்றிகொள்ளமுடிந்தது. மட்டகளப்பு நகரை அபிவிருத்திசெய்ததில் இந்த ராஜன்செல்வநாயகத்தின்பங்கு அளப்பரியது.தமிழரசுகட்சிகாலத்திலிருந்து (1956ம் ஆண்டிலிருந்து) தொடர்ச்சியாக மட்டகளப்பு எம்.பி.யாக இருந்த இராஜதுரை அவர்களால் செய்யமுடியாத பணிகளை 1970-1977 காலப்பகுதிக்குள் இராஜன்செல்வநாயகத்தால் செய்யமுடிந்தது.சுமார் முப்பது வருடங்கள் எம்பியாக இருந்த இராஜதுரையின் பெயர்சொல்ல இன்று மட்டகளப்பில் எஞ்சியிருப்பது என்ன?

ஒரேயொரு இசைநடனக்கல்லுரி மட்டும்தான்.அதுகூட இராஜதுரை அவர்களின் இறுதிநேர அரசியல்ஞானத்தால் பெற்றுக்கொள்ளபட்டது.தமிழ் தமிழ் என்று தன்னையும் தனது பிரதேசமக்களையும் ஏமாற்றிய யாழ்பாண அரசியல்வாதிகளின் துரோகங்களை புரிந்துகொண்டபின்னர் (1977 தேர்தலின்பின்) ஆளும்கட்சிக்குமாறி அமைச்சரானதனால்தான் சாத்தியமானது .இன்றைய சூள்நிலையில் கிழக்குபல்கலைகழகமும்,தென்கிழக்குபல்கலைகழகமும் இல்லாத ஒரு கிழக்குமாகாணத்தினை கற்பனை செய்து பாருங்கள்.கிழக்குமாகாணத்தின் இரண்டு கண்களாகவும் இருக்கும் இந்த பல்கலைகழகங்கள் யாரால் கட்டபட்டன. தமிழ்> இனம்,தாயகம்,தமிழீழம் என்று கூச்சலிட்ட அரசியல்வாதிகளால் அல்ல.தமிழீழ அரசியல்வாதிகளும் விடுதலை இயக்கங்களும் துரோகபட்டமளித்து சுடுவதற்காக துரத்தி;திரிந்த அமைச்சர்களாதானே மக்களுக்கு அவைகிடைத்தன.ஒரு தேவனாயகமும் ஒரு அஸ்ரப்பும் இல்லாவிடின்; யுத்தத்தின் இடிபாடுகளுக்குள்ளிருந்து இந்த இரு உயர் கல்விநிலயங்களும் மக்களுக்கு கிடைத்திருக்குமா? சுமார்50 ஆண்டுகாலமாக வடக்கிலும், கிழக்கிலும்.இனமானம் பேசி பேசி வாக்குசேகரித்தவர்களால் இன்று எம்மக்களுக்கு எஞ்சியிருப்பதென்ன? கண்ணீரும் கம்மலையுமான வாழ்வு மட்டுமே.ஆகவே யுத்தத்தினால் அழிவுண்டுகிடக்கும் மட்டகளப்பை கட்டியெளுப்ப வீரவசனங்களும்,வெற்று கூட்டுகளும் உதவபோவதில்லை என்பது புலனாகின்றுது.ஆளும்தரப்புடன் இணைந்து அபிவிருத்திகாண்பதே இன்று நம்மக்கள் தேர்வுசெய்யவேண்டிய வழியாகும்! --புற்றிக்