தேர்தல்கள் அறிவிக்கப்பட்டவுடன் பலதரப்பிலிருந்தும் மழைக்கு முளைத்த காளான்கள் போன்று பல மனித உரிமைவாதிகள் தோற்றம் பெற்றனர். மட்டகளப்பில் ஆயுதக்குழு ஆள்பிடிக்கிறது, கப்பம் பறிக்கிறார்கள், கடத்தல் நடக்கிறது,கருணாதரப்பு மற்றையகட்சிகளை வெருட்டுகிறது என்று மனித உரிமைவாதி பட்டங்களுடன் பலர் கொடிபிடித்தனர்.புலிகளின் மட்டகளப்பு பிரதேசபிரச்சாரப்பொறுப்பை இவர்கள் தற்காலிகமாக தங்களுக்குள் பங்கிட்டு கொண்டனர். தேர்தல்நடத்த கூடாது என்று புலிக்கூட்டமைப்பு ஒருபுறமும் இந்த புதிய புதிய மனித உரிமைவாதிகள் மறுபுறமுமாக பகிரதப்பிரயேத்தனம் பண்ணினர்.
ஆனால் இன்று நிலையென்ன? மட்டகளப்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்று நடத்தபடுவதற்கு ஏதுவான சூழ்நிலை உருவாகின்றது. இதுவரை காலமும்(கிழக்கு புலிகளிடமிருந்து விடுவிக்கப்படும் வரை) இருந்துவந்த வன்முறைசூழல் வெகுவாக குறைந்து தணிந்துள்ளது.கடந்த இருபத்திஐந்து வருடங்களில் நடந்த தேர்தல்கள் எல்லாவற்றையும்விட அமைதியானதொரு சூழலில் மட்டக்களப்பு மக்கள் வாக்களிக்க காத்திருக்கின்றார்கள்.
கடந்து வந்த ஒவ்வொரு தேர்தல்களிலும் படுகொலைகள்,சூட்டு சம்பவங்கள் என்று பாரிய அசம்பாவிதங்கள் நடக்காத ஒரு வக்களிப்பு என்பது மட்டகளப்பு மக்களின் கனவாக மட்டுமே இருந்துவந்தது. 1982ம்ஆண்டு மாவட்டசபை தேர்தலில் தொடங்கி மா.வா.இராமசந்திரன் மீதானபடுகொலை கடந்த 2004ம்ஆண்டு பாராளுமன்றதேர்தலில் இராஜன்சத்தியமூர்தி கொலை செய்யப்பட்டதுவரை தொடர்ந்து கொண்டே இருந்தது.வேட்பாளர் ராஜன்சத்தியமூர்த்தி கொலை செய்யப்பட்டது மட்டுமன்றி அவரது புதைக்கப்பட்ட உடலை தோண்டியெடுத்து புலிகள் துவம்சம் செய்து மகிழ்ச்சிகொண்டாடிய தருணங்களில் மட்டகளப்பில் யாரும் மனிதஉரிமைபற்றி கவலைகொள்ளவில்லை. தேர்தலைஒத்திபோடசொல்லியோ,நடத்தவேண்டாம் என்றோ தமது சகவேட்பாளரை பறிகொடுத்த சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்கூட்டமைப்பினர் யாரும் ஈனக்குரலிலேனும் சிணுங்கியிருக்கவில்லை. ஆனால் இம்முறைமட்டும் மட்டகளப்பு மக்களின் மனிதஉரிமைகளுக்கு மதிப்பளித்து குரல்கொடுப்போர் பலர் கொடுக்குகட்டிக்குகொண்டு புறப்பட்டனர்.
ஆனாலும் இந்த ரி.எம்.வி.பி.வளர்சியை சகிக்கமுடியாத திடீர் மனிதஉரிமைவாதிகளின் ஆரூடங்களுக்கும், உள்ளுணர்வின் விருப்பங்களுக்கும்
மாறாக மட்டகளப்பில் நாளுக்கு நாள் இயல்பு நிலை முன்னேறிவருகிறது. ஒரு ஜனநாயக மீட்சிக்கான போராட்டப்பாபாதையில். 25வருடகால ஆயுதகலாசார பின்னனி என்பது கவனத்தில் கொள்ளபடவேண்டியதாகும் ஆயுதங்களை கைவிட்டு ஜனநாகய நீரோட்டத்தில் கலந்து கொள்ள விரும்புவபர்களை,அந்த மாபெரும் அரசியல் திருப்புமுனையை கவனமாக கையாளவேண்டும். ஜனநாயகத்தை யாரும் வானத்திலிருந்து
இறக்கிவிடமுடியாது. களத்தில் நிற்பவர்களின் உண்மையான அர்ப்பணிப்பும் அதணுடாக களநிலமைகளினால் ஏற்படும் மாற்றமுமே ஜனநாயகத்தை மீட்டெடுக்க வல்லன.
சமூகபொறுப்பற்ற தத்தமது இயக்க விசுவாசங்களிலிருந்தும் மேலாதிக்க சட்டாம்பித்ன அணுகுமுறையினுடாகவும் எழும் மனிதஉரிமைகுறித்த வெற்று
கூச்சல்கள், குட்டையை குழப்புவதைதவிர வேறு எதையும் செய்யப்போவதில்லை.ஆனால் இவையனைத்து சவால்களையும் வென்று கடந்த 25
வருடங்களில் முதல்தடவையாக மட்டகளப்பில் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் ஒன்று நடந்தேறுவதற்கான வெளிச்சங்கள் தென்படுகின்றன! நன்றியுடன்
- பற்றிக்