திரு.ஆனந்தசங்கரி அவர்களுக்கு. தாங்கள் மட்டகளப்பு உள்ளுராட்சி மன்ற தேர்தலையொட்டி 'மட்டகளப்பு மக்களுக்கு" என விழித்து வெளியிட்டிருந்த
பகிரங்க வேண்டுகோளை செவிமடுத்ததன் பலனாகவே இப்பதிலுரையை தங்களுக்கு எளுதவினைகிறேன். ஒருதேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது அவரவருக்குரிய ஜனநாயக உரிமையாகும். ஆனால் உங்களைப் போன்ற முதிர்ந்த அரசியல்வாதி ஒருவர் குறைந்த பட்சம் நீங்கள் ஆதரிக்கின்ற கட்சிகளை அவர்களது கொள்கைகளை,அவற்றினை நிறைவேற்ற அவர்கள் கைக்கொள்ளும் வழிமுறைகளை பற்றி விளக்கி கூறியிருக்கவேண்டும்.அப்படி கூறி இருந்தால் அது மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்ய பயனுடையதாயிருந்ந்திருக்கும்.ஆனால் துரதிஷ்டவசமாக தங்களுடைய வேண்டுகோள் அவ்வாறு அமைந்திருக்கவில்லை. மாறாக தங்களது பிரசுரத்தில் சுருக்கமாக இரு விடயங்கள் மட்டுமே அடங்கிருந்தத.
(1) மக்களது அவலங்களுக்கும், கஷ்டங்களுக்கும் காரணம் தமிழர்களிடையே ஒற்றுமை இன்மைதான் எனக்கூறி மீண்டும் கிழக்க்கில் தமிழ் இன உணர்வுகளை கிளறிவிடும் முனைப்பு.
(2) மூன்று இயக்கங்கள் கூடி அப்பிள்சின்னத்தில் ரி.எம்.வி.பிக்கு எதிராக போட்டியிடுவதை தமிழர் ஒற்றுமையின் அடையாளமாக சித்தரித்து அவர்களுக்கு வாக்கு சேகரிப்பது.
இவற்றினை கருத்தில் கொண்டு பார்க்கையில் கிழக்குமாகணத்தின் அரசியல் போக்கில் ஏற்பட்டு வருகின்ற காலமாற்றத்தை சீர்குலைப்பதே உங்கள் குறி
எனத்தெரிகிறது.அது மட்டுமன்றி கிழக்குமாகாண மக்களிடம் ஏற்பட்டிருகின்ற விழிப்புணர்வையும் அரசியல் வேட்கையையும் கண்டு பயம் கொள்ளுகின்ற தொனி தங்களது எழுத்துக்களில் விரவிகிடப்பதனை அவதானிக்க முடிகின்றது.ஆகவே கிழககுமக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற இந்த சமூக அசைவியக்கத்தை கட்டிபோடமுயலுகின்ற எத்தனத்தில் நீங்களும் இறங்கியிருக்கின்றீர்கள். அதற்காக நிறைந்த பொய்களையும்,புரட்டுகளையுமமே உங்கள் பேனா துணைக்களைத்திருக்கின்றது. உங்களது வேண்டுகோளில் உள்ள அதிகமான வரிகள் யாழ்மேலாதிக்கம் என்கின்ற ஒரு அதிகாரப்போக்கு அறவே இல்லையென்று அடித்து சத்தியம் செய்ய முயல்கின்றன .அதற்குதுணையாக வரலாற்றை திரித்து பொய்சாட்சிசொல்கின்றீர்கள்.'யாதும் ஊரே யாவரும் கேளீர்"என்று கிழக்குமாகணமக்களுக்கு பள்ளிபாடம் நடாத்தமுனைகிறீர்கள்
யாழ்பாணத்தில் ஒழுங்கைக்கு ஒரு சாதிபிரிவுகளையும் ஒடுக்குமுறைகளையும் வைத்துக்கொண்டு மட்டகளப்பிற்கு வந்து யாதும் ஊரே யாவரும் கேளீர்
என்றுசொல்ல உங்களுக்கு தார்மீகதகுதி இல்லை.'கடந்த காலங்களில் தமிழ் கட்சிகளின் தலைமை பொறுப்பு கிழக்குமாகாண மக்களுக்கு பகிர்ந்து
வழங்கப்பட்டிருக்கின்றது" என்றும்'தந்தைசெல்வா,சிவசிதம்பரம்,அமிர்தலிங்கம்.போன்றோரின் தலைமைகளை கிழக்குமாகண மக்களும் மதித்து வந்திருக்கிறார்கள்" 'இராஜதுரை அவர்களின் பேச்சாற்றலை வடபகுதிமக்கள் மதித்து வந்திருக்கிறார்கள்"என்று பலவரிகள் உங்கள் கடிதத்தில் காணப்படுகின்றது.சுமார் ஐம்பதுவருட தமிழ் அரசியல் வரலாற்றில் ஒரே ஒரு வருடத்திற்கு மட்டும் தமிழரசுகட்சிக்குரிய தலைமைபொறுப்பு. பட்டிருப்பு தொகுதி எம்பியான இராசமாணிக்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.அந்த புறநடையை மட்டும் வைத்துக்கொண்டு யாழ்பாண அரசியல்வாதிகளின் மேலாதிக்க அணுகுமுறையை மறைக்க முயலுகிறீர்கள் கிழக்குமாகாணத்தை மட்டுமல்ல வன்னியை, மலையகத்தை, முஸ்லிம்களை கொச்சைபடுத்திமடையரென்றும்,காட்டான்கள்என்றும்,தோட்டகாட்டான்கள்என்றும்,தொப்பிபிரட்டிகள் என்றும் நடத்திவந்த கேவலமான உண்மைகள் அனைத்தையும் மறைத்துவிட நீங்கள் நினைப்பது சிறுபிள்ளைத்தனமாக மட்டுமே இருக்கமுடியும்.த.வி.கூட்டணிக்கு தலைவராக வரவேண்டிய இராஜதுரை அவர்களை ஒதுக்கிய வரலாறுகள் ஒன்றும் கண்டி இராசன் காலத்தில் நடந்தகதையல்ல நாம் கண்ணால் கண்டுவந்த வரலாறு. இராஜதுரைக்கு
எதிராக காசிஆனந்தனை நிறுத்தி எதிர்பிரச்சரத்திற்காக கோவைமகேசனும்,மாவைசேனாதிராஜாவும் மட்டகளப்பில் தங்கி நின்றுபிரச்சாரம் செய்தசம்பவங்களை எல்லாம் நீங்கள் மறந்துபோனதுபோல் நடிக்கலாம் ஆனால் மட்டகளப்பு வாழ் மக்கள் மறக்கபோவதில்லை. ஏனென்றால் 30.வருடங்கள் கழித்து இன்றும்அதுதான் நடந்து கொண்டிருக்கறது. எந்ததலைமைகள் உருவாகிவிடக்கூடாதென்று அன்று அமிர்தலிங்கமும், பரிவாரங்களும் கங்கணம் கட்டிநின்றார்களோ அதேபோல்தான் இன்றும். கிழக்குமாகணத்திலிருந்து உருவாகியுள்ள ஒரு புதிய அரசியல்கட்சிக்கு எதிராகவும், கிழக்குமக்கள் தமது சொந்ததலைமைகளை உருவாக்கிவிடக்கூடாது என்பதற்காகவும் சித்தாத்தனும்,சிறிதரனும்,டக்ளசும்,சங்கரியும் கைகோர்த்திருக்கின்றார்கள்.
யு.என்.பி.ஆட்சிக்கு வருகின்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் கூட்டுசேர்து அமைச்சரகிக்கெண்ட தமிழ்காங்கரசும்,தமிழரசுக்கட்சியும் பெற்றுக்கொண்ட அமைச்சர்பதவிகள் எப்போதாவது கிழக்குமாகண தலைவர்களுக்கு வழங்கப்பட்டதா? இவையனைத்தும் நடந்துமுடிந்த வரலாறுகள். சங்கரி ஐயா அவர்களே இதுவரை நீங்கள் எத்தனை கடிதங்களை எழுதியிருக்கிறீர்கள்? இந்தியதலைவர்கள்,இலங்கைதலைவர்கள்,ஏன் உங்கள் அன்புத்தம்பி
பிரபாகரனுக்குத்தான் எத்தனை கடிதங்கள்.ஆனால் நீங்கள் இதுவரை கடிதம் ஏழுதாத ஒரேஒருவர் இருக்கின்றார் என்றால் அது கருணாதான்.பிணங்களை தூக்கி தூக்கியே சலிக்காத வேதாளம் மீண்டும் மீண்டும் பிணங்களை தூக்கிதோளில் போட்டுகொண்டு முருங்கைமரத்தில் ஏறுவதுபோல் பிணம்தின்னி பிரபாகரனை திருத்த நீங்கள் எடுக்கும் அயராதமுயச்சி; பாராட்டதக்கது. ஆனால் அந்த பிரபாகரனுக்கு எழுதக்கூடிய கடிதங்களில் ஒன்று கூட உங்களால் கருணாவுக்கு எழுதப்படதது ஏன்?
புலிகளையும், ஜே.வி.பி.ஐயும்,ஏன் சிஹல உருமயயையும் கூட கடிதமெழுதி திருத்தமுடியும்மென்றால் கருணாவை திருத்தமுடியாதா? என்னகாரணம் ஏன் இதுவரை அப்படியொரு கடிதத்தை கருணாவுக்கோ,ரி.எம்.வி.பி.க்கோ எழுதமுடியவில்லை. திரு.வீ.ஆனந்தசங்கரி. தலைவர்.த.வி.கூட்டணி இடமிருந்து கடிதம் பெறும் தகுதியைகூட கருணா பெற்றுவிடக்கூடாது,அதனுடாக அரசியலில் கருணா ஒரு அரசியல் முக்கியஸ்தர் எனும் தகுதியை பெற்றுவிடக்கூடாது,என்பதில் நீங்கள் எவ்வளவு கவனமாயிருக்கின்றீர்கள் பாத்தீர்களா? இந்த கவனத்துக்கு என்னபெயர்? வன்முறையாளனுக்கு கடிதம் எழுதமாட்டன் என்கிறீர்களா? பிரபாகரனைவிடவா? கருணா வன்முறையாளன்? கருணாவின் குருநாதனே பிரபாகரன்தானே. பிரதேசவாதிக்கு
கடிதம் எழுதமாட்டேன் என்கிறீர்களா? சிகல உருமையவின் பேரினவாதத்தைவிடவா கருணாவின்பிரதேசவாதம் கொடியது உங்களது இந்த திட்டமிடப்பட்ட கவனத்துக்கும் நகர்வுகளுகும் என்னபெயர்? அதுதான் யாழ்மேல்லாதிக்கம் நீங்கள் எப்படித்தான் கிழக்கில்லிருந்து ஒருகட்சி உருவாகிவிடகூடாது என்று ஒற்றைகால் தவம்புரிந்தாலும் காலமாற்றமானது முன்னேறிக்கொண்டேயிருக்கும் என்பதுமட்டும் நிடசயம்.மட்டகளப்பு மக்களுக்கு செல்வநாயகத்தையும், அமிர்தலிங்கத்தையும் காட்டி பச்சாதபம்தேடுகின்ற முயச்சியில் உங்களது சிலவரிகள் அமைந்திருக்கிறது.அவர்களை எல்லாம் மட்டகளப்பு மக்கள் மதித்து இதயத்தில் ஏற்றிவைத்திருக்கிறார்கள் என மக்களை நீங்கள் பப்பாசியில் ஏற்றமுனைகிறிர்கள்.அந்தகாலம் மலையேறிவிட்டது ஐயாசங்கரி அவர்களே 1989.பாராளுமன்றத்தேர்தலில் அமிர்தலிங்கம் அவர்கள் மட்டகளப்பானை ஏமாற்ற களமிறங்கி படுதோல்வி கண்டதை மறந்துவிட்டீர்களா? தானைத்தளபதி அமிர்தலிங்கத்திற்கே அல்வா கொடுத்தவர்கள் மட்டகளப்பு வாக்காளர்கள். இந்த சங்கரியின் கடிதத்திலும் சித்தாத்தனின் சித்துவிளையாட்டுகளிலுமா ஏமாறப்போகிறார்கள்? மட்டகளப்பில் தங்கிநின்று தேர்தல் வேலைகளை கவனிக்கிறாராம் புளொட்தலைவர் பி.பி.சி செய்திசொன்னது. இன்றுமட்டகளப்பு நகரில் சித்தாத்தர் காலடிவைப்பதற்கும் சங்கரி அவர்கள் சென்றுவருவதற்கும் வழிசமைத்தவர்கள் யார் புலிபாசிஸத்தை நேரெதிரே முகம்கொண்டு தோற்கடித்தவர்கள்யார்?
இதற்காக எத்தனை உயிர்கள் அர்ப்பணிக்கப்பட்டன.எவ்வளவு இழப்புகளை எதிர்கொள்ளநேர்தது. இத்தனைக்கும் பின்னரும்கூட கேவலம் உள்ளுராட்சி அதிகரங்களைகூட அந்த மக்களுக்ககு விட்டுவைக்க நீங்கள் தயாரில்லை.வவுணதிவில் வீதிபோடவும் பனிச்சங்கேணில் பாலம்கட்டவும் பாலமுனையில் பஸ்கோல்ட் அமைக்கவும் சித்தாத்தரும்,சிறிதரனும்தான் தீர்மானிக்கவேண்டும் என்றால் இதைவிட அடிமைத்தனம் எது இருக்கமுடியும?
திரு.சங்கரிஅவர்களே இன ஒற்றுமை பேசுகிறீர்கள் இந்த இனவாத அரசியலில் குளிர்காய்வது நீங்கள்.ஆனால் கோம்பை சுமப்பது கிழக்குமாகண மக்கள்.
நாங்கள் அடுத்தவீட்டு ஆதங்காவுடனும்,கூப்பிடுதூரத்திலிருந்த குஞ்சுபய்டாவுடனும்.ஒன்றாகவாழ்தவர்கள் தமிழ் தமிழ்என்று உங்கள் அரசியல் ஆசான் பொன்னம்பலம் தொங்கிவைத்த அரசிலை என்று நம்பத்தொடங்கினமோ அன்றிலிருந்து எங்களுக்கு அழிவுதானேமிச்சம்.அப்போதும் இப்போதும் எப்போதும் அகிம்சையே உங்கள் கொள்கை என்று உங்களுக்கு புனிதப்போர்வையை போர்திக்கொண்டு மட்டகளப்பு மக்களிடம் வாக்குகேட்கிறிர்கள் இன்று நீங்கள் திட்டிதீர்க்கும் புலிகள் எங்கிருந்து உருவானார்கள்?
கூட்டணியின் கோடிப்புறத்தில்தானே குஞ்சு காளான்களாய் முளையிட்டன இந்த ஆயுதஇயக்கங்களும் வன்முறையும்,கலாச்சரமும்.அதைவிடுத்து ஏதோ கந்திகுல்லாய் போடாதகுறையாக கதை அளக்கவேண்டாம் சங்கரி அவர்களே. 'இத்தேர்தலில் தமிழ்கட்சிகள் ஒன்றாக ஒரே அணியில் சுயேட்சைகுழுவாக அப்பிள்பழ சின்னத்தில் போட்டியிடுகிறோம்"என தெரிவித்திருந்திருந்தீர்கள். ஒற்றுமையை பற்றி தயவுசெய்து நீங்கள் கூறவேண்டாம் இதுவரைகாலமும் இல்லாத ஒற்றுமை இப்போது எதற்காகவந்தது. தொடங்கும்போதே பலபத்து இயக்கங்கள், அதற்குள்ளேயே குத்துவெட்டுக்கள், தலைமைபோட்டியில் ஆயிரக்கணக்கானகொலைகள், புலிகள் துரத்தி துரத்தி சுட்டபோதும் ஏற்படாதஒற்றுமைகள்,தமிழ்மக்களுக்காக ஒரு தீர்வை ஒன்றாக சமர்பிக்க முடியாத ஒற்றுமை, இன்றுவரை வடமாகாணத்திற்கான இடைக்காலநிர்வாகசபைக்கு சங்கரியா? டக்ளஸா? என்பதில் காலத்தை வீண்டிக்கும் ஒற்றுமை. யார் பேசுவது ஒற்றுமையை பற்றி? ஒன்றை மட்டும் ஏற்றுகொள்கின்றோம் ஜயா உங்கள் ஒற்றுமைக்கு ஒரே ஒருதடவை நீங்கள் ஒற்றுமைபட்டிருக்கிறீர்கள் ஆனால் அது 'தமிழ்மக்களின்" ஒற்றுமையல்ல. மட்டகளப்பானுக்கெதிரான யாழ்பாணத்தின் ஒற்றுமை. ஐயா சங்கரி அவர்களே நீங்கள் நீடூழி வாழவேண்டும் அணுவைதுளைத்து ஏழ்கடலைபுகுத்தி குறுகத்தரித்த குறள்போல யாழ்மேலாதிக்க பண்பாட்டின் முழுவடிவத்தையும் ஒரே மனிதரில் தரிசிக்கும் வாய்ப்பு இனிவரும் எங்கள் சந்ததிக்கும் கிடைப்பதற்காக.
ஐயா நீங்கள் நீடூழிவாழவேண்டும்!
- நன்றியுடன் பற்றிக்