தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரவேசமும், அதனைத் தடுப்பதற்கான சதிமுயற்சிகளும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தப்படவுள்ள உள்ளுராட்சித் தேர்தலி;ல் முதன் முறையாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கம் போட்டியிடவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து கிழக்கு மாகாணத் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதார, அபிவிருத்தி சம்பந்தப்பட்ட உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க இவர்கள் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடவிருக்கின்றனர். இவர்களின் அரசியல் பிரவேசம் கிழக்கு மாகாண தமிழ் மக்களை பெரும் மகிழ்ச்சியிலும், திருப்தியான மனநிலையிலும் தள்ளியிருப்பதாக அப்பகுதியிலிருந்து கிடைக்கப்பெறும் தகவல்;கள் மூலமாக அறியக் கூடியதாகவுள்ளது.

தமிழ் விடுதலைப் புலிகளுக்கு கிழக்கில் கிடைத்துவரும் ஆதரவினை பொறுத்துக் கொள்ள முடியாத புலிகள் தமது நாசகார செயற்பாடுகளை இம்மாகாண தமிழ்- முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு கட்டமாக காத்தான்குடி கர்பலா கிராமத்துள் ஜாமியுன் மனார் ஜீம்மாப் பள்ளிவாசலில் இஷாத் தொழுகையை முடித்துவி;ட்டு வீடுசென்று கொண்டிருந்தவர்கள் மீது பள்ளிவாசலுக்கருகில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இத்தாக்குதல் மூலம் தமிழ்-முஸ்லிம் உறவை சீரழிப்பதே புலிகளின் ஒட்டுமொத்த இலக்காகும். இதன் மூலமாக கிழக்கிலுள்ள பல முஸ்லிம்-தமிழ் பிரதேசங்களில் பதற்றத்தை ஏற்படுத்தவே இவர்கள் முயற்சிக்கின்றனர். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது. அவ்வாறு அவர்கள் ஒற்றுமையின்றி முட்டி மோதிக் கொள்வார்களேயானால் அது புலிகளின் வெற்றிக்கே வழிவகுக்கும் என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். கடந்த காலங்களில் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட இனச் சுத்திகரிப்புக் காரணமாக தமிழ்-முஸ்லிம் உறவு வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அதனால் அப்பகுதிகளில் பல்வேறு மோதல் நிலைகள் ஏற்பட்டது. ஆனால் இன்று அந்நிலை மாறி தமிழ்-முஸ்லிம் மக்கள் சுமுகமாக வாழ்ந்து வருகின்றனர். அதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு ஜனநாயக ரீதியில் இன்று மக்கள் மத்தியில் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர். இதைத் தடுக்கவே புலிகள் தமது இனமோதல் யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர்.

தற்போது நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலானது தமிழ் மக்களின் வாழ்வில் விடிவை ஏற்படுத்தித்தரவல்லதாக இருக்கிறது. இதை எப்படியாவது நிறுத்தி விட்டால் தான் தாங்கள் வாழலாம் என்ற முனைப்புடன் பாஸிஸப் புலிகள் செயற்பட்டு வருகின்றனர். இத்தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற்றால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் வெற்றியும் அவர்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கும் வெளி உலகுக்கு தெரிந்துவிடும் என்பதால், இதைச் சகித்துக் கொள்ள முடியாத புலிகள் தமது கொடூர யுக்திகளைப் பொதுமக்கள் மத்தியில் கட்டவிழ்த்துவிட முனைந்துள்ளனர். ஆனால் இவற்றுக்கெல்லாம் இடம்கொடுக்க முனையாது அரசாங்கம் தமது படையினரை கிழக்கிலுள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் நிலைகொள்ளச் செய்துள்ளது. இது மக்களின் பாதுகாப்பையும், ஒற்றுமையையும் உறுதிப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட சிறந்த நடவடிக்கையாகும். மேலும் எதி;;ர்வரும் உள்ளுராட்சித் தேர்தல்கள் மூலம் கிழக்கினை அபிவிருத்தி வலயமாக பிரகடனப் படுத்தி அனைத்துவகையான அபிவிருத்தித் திட்டங்களையும் அரசு முன்னெடுத்துக் கொண்டு வருகின்றமை வரவேற்கத்தக்க விடயமாகும். இதனை தடுப்பதற்கான முழு முயற்சிகளையும் புலிகள் இன்று கட்டம் கட்டமாக மேற்கொள்ளத் திட்டமிட்டுவருவதாகத் தெரிகிறது. இவர்களின் இச்செயற்பாடுகளுக்கு சில பக்கச் சார்பான ஊடகங்களும் துணைபோவதுதான் வேதனைக்குரிய விடயமாகும்.

இவ்வாறு கிழக்கில் புலிகள் செய்கின்ற பொதுமக்களிற்கெதிரான நடவடிக்கைகளை, ஒரு சில ஊடகங்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மீது சாட்டுவது கண்டிக்கப்படவேண்டியதொன்றாகும். இதேவேளை, புலிகளின் இவ்வாறான தந்திரோபாயத் திட்டங்கள் கிழக்கில் மட்டுமல்ல, வடக்கிலும் மேற்கிலும் கூடத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதன் ஒரு கட்டமாக அமைச்சர்களைக் குறிவைப்பதுடன், பொதுமக்களையும் இலக்குவைக்கத் தொடங்கியுள்ளனர். பொதுமக்களை இலக்குவைக்கமாட்டோம் எனக் கூறிக்கொண்டு, பொதுமக்களையே இலக்குவைத்துக் கொண்டு தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர்.

இவ்வாறாக பயங்கரவாதத்தில் விருப்புக் கொண்டு, மக்களையும் அரசாங்கத்தையும் அச்சுறுத்துவதில் இன்பம் காணுகின்ற புலிகள் தமது பாசிஸ நடவடிக்கைகளைக் கைவிட்டு ஜனநாயகத்தின் பக்கம் மீள வேண்டும் என்பதே கிழக்கு வாழ் மக்களினதும் எதி;ர்பார்ப்பாக இருக்கின்றது. எத்தனை காலந்தான் தமிழ் மக்களும் துன்ப, துயரங்களுடன் வாழ்வைக் கழிப்பது. அம்மக்களுக்கென்று ஒரு சுதந்திரமான, நிம்மதியான வாழ்வு வேண்டாமா?

இதற்காகத்தான் இன்று கிழக்கில் துன்ப துயரங்களை அனுபவித்து சோர்ந்து போயுள்ள மக்களுக்கு ஒரு காத்திரமான தீர்வைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் உள்ளுராட்சித் தேர்தலும் நடத்தப்படவிருக்கின்றது. இந்நிலையை மாற்றி அவர்களை மீண்டும் துன்ப, துயரத்திற்குள் தள்ளவே புலிகளும், அவர்களுக்கொப்பான சில சக்திகளும் சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் இவையெல்லாவற்றிற்கும் மத்தியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சமாதானத்தை நிலைநாட்டி, அதன் மூலமான கிழக்கு மாகாண மக்களுக்கு மகிழ்ச்சியளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வழியிலையே உண்மையான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டுமாக இருந்தால் அதற்கான ஒரே வழி அரசியல் என உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளையே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் நிமித்தமாக கிழக்கு மாகாண மக்களின் மனங்களில் அரசியல் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், கிழக்கு மாகாணத்தி;ல் தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு உள்ள ஆதரவினை ஏற்றுக்கொள்ள முடியாத புலிகளும், அவர்களின் முகவர்களும், ஒருசில நாசகார சக்திகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் முதலாவது வெற்றியாக தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியில் இந்நாசகார சக்திகளின் மீதான வெறுப்புணர்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதனால் தாம் தோற்றுவிடுவோம் என்றுணர்;ந்த அந்நாசகாரக் கட்சிகளும், புலிகளின் முகவர்களான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இத்தேர்தலை நிறுத்துவதற்கான முழு முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

எனினும் நடைபெற உள்ள உள்ளுராட்சித் தேர்தல் எப்படியேனும் நடந்தேயாகும் என அரசாங்கம் கூறியுள்ள நிலையில், கிழக்கு மாகாண தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு அப்பிரதேசத்து மக்கள் அமோக வெற்றியினை பெற்றுக் கொடுத்து விடுவார்;கள் என்று உறுதியாக நம்பப்படுகிறது. எது எவ்வாறு இருந்தாலும் இனி, கிழக்கு மாகாணத்தின் விடிவெள்ளிகளாய், உதய சூரியனாய், அபிவிருத்திக்கான அச்சாணியாய் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் திகழ்வார்கள் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

- TMVP